முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் இன்று தனது 80 ஆவது வயதில் காலமானார். நோய்வாய்பட்டிருந்த அவர், கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்று காலமானார்.
அன்னாரின் பூதவுடல் இலக்கம் 4, பாத்தியா மாவத்தை, தெஹிவளையில் அமைந்துள்ள அவரின் வீட்டில் வைக்கப்பட்டு ஜனாஸா நல்லடக்கம் தெஹிவளை முஸ்லிம் மையவாடியில், நாளை நடைபெறும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
இருப்பதை தொலைத்து விட்டார்கள் - பிரபா கணேசன்
புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதாக கூறிக் கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பும் அடிவருடிகளாக இருந்த தென்னிலங்கை தமிழ் முற்போக்கு கூட்டணியும் பொதுத் தேர்தலின் போது தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிக்கமைய செயல்படாமல் தமது நிலைப்பாட்டை காப்பாற்றிக் கொள்ளும் முகமாக அரசியல் செய்வது கேவலமானது என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்ததாவது, புதிய அரசியலமைப்பு 100 நாட்களுக்குள் உருவாக்கப்பட வேண்டும் என அழுத்தம் கொடுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மற்றும் தென்னிலங்கை ஐ.தே.க அடிவருடகளாக இருக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியினர் அதனைப் பற்றி பேசுவதில்லை. உள்ளுராட்சிசபை தேர்தல் சம்பந்தமாக தனது அதிருப்தியை தெரிவித்த முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்றவர்கள் ஊடகங்களுக்கு தமது எதிரான கருத்துகளை தெரிவித்து விட்டு அரசாங்கத்திற்கு பாராளுமன்ற வாக்கெடுப்பின் போது ஆதரவு தெரிவித்திருப்பது கேவலமானது. அதே போல் தென்னிலங்கை தமிழ் கட்சிகளில் ஒரு சிலர் இதற்கு ஆதரவாக வாக்களித்திருப்பதன் மூலமாக தமது கூட்டணியின் நிலை...
